மைத்திரிபால சிறிசேன ஆதரவு அணியும், மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியும் இன்னுமொரு தடவை பேச்சு நடத்தவுள்ளன என்று அறிய முடிகின்றது.
இரு அணிகளும் முன்னர் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. சில பௌத்த பிக்குகள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இரு அணிகளும் இன்று சந்தித்துப் பேசவுள்ளன என்று தெரியவருகின்றது.
இந்தச் சந்திப்பு வெற்றியளிக்கும் சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு என்று கட்சித் தகவல்கள் தெரிவித்தன.