Monday , February 3 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்!

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச ரீதியில் ஒன்றிணைந்துள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தனி தமிழீழம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு – நாராஹேனபிட்ட இராணுவ வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “சமகாள அரசாங்கம் இராணுவத்தை தவறாக மதிப்பிட்டுள்ளதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன.

எனினும், சர்வதேச நீதிமன்றில் இராணுவத்தினரை நிறுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச ரீதியில் ஒன்றிணைந்துள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தனி தமிழீழம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அது ஒருபோதும் சாத்தியமற்ற விடயம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv