Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரியின் மனநிலை அடுத்து இதற்கு வாய்ப்பில்லையாம்

மைத்திரியின் மனநிலை அடுத்து இதற்கு வாய்ப்பில்லையாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி ஜனாதிபதி தேர்தலிற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்

பேட்டியொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் ஏனையவர்களின் நிகழ்ச்சிநிரலிற்கு ஏற்ப நான் செயற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவதா இல்லையா என்பது குறித்து நானே தீர்மானிக்கவேண்டும் என தெரிவித்துள்ள சிறிசேன எனக்கு அவ்வாறான எண்ணம் எதுவும் இல்லை நான் ஏனையவர்களின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ள தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தடைவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு தற்போதைக்கு இது குறித்து பதிலை தெரிவிக்க முடியாது இதற்கான காலம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்

இது குறித்து தற்போது தீர்மானிக்கவேண்டிய தேவையில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதகாலமாக ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு மாற்றம் நிகழ்கின்றது என குறிப்பிட்டுள்ள சிறிசேன இன்னும் ஒரு வருட காலத்தில் என்னநடக்கும் என யாரும் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv