கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மகிந்த பேச்சுவார்த்தை
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று தற்போதைய நிலையில் இடம்பெற்றுவருகிறது.
கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள விசேட உரை தொடர்பில் இதன்போது முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தௌிவுபடுத்தவுள்ளதாக சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் எமது செய்திச் சேவைகத் தெரிவித்தார்.