சீனாவிற்கான இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்தவாரம் இலங்கை திரும்பிய கையுடன், பாதுகாப்பு சபை கூட்டத்தை கூட்டினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
வழக்கமாக பாதுகாப்புசபை கூட்டங்களில் அரசியல்வாதிகள் அழைக்கப்படுவதில்லை. பாதுகாப்பு தரப்பினர் ஜனாதிபதி உள்ளிட்ட ஒரு சில பிரமுகர்கள்தான் கலந்து கொள்வார்கள். எனினும், கடந்தவாரம் மைத்திரி வித்தியாசமான முடிவெடுத்திருந்தார். கட்சி பிரமுகர்களையும் அழைத்திருந்தார்.
ஐ.தே.க தரப்பிலிருந்து ராஜித சேனாரத்ன உள்ளிட்ட ஒரு சிலர் கலந்து கொண்டிருந்தனர். சு.க தரப்பிலிருந்து அநுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் பாதுகாப்புசபை கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டனர்.