நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
வரகாபொல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்ன் ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போதைய அரசாங்கம் அரசியல் அமைப்பை மாற்றியும், தமது அதிகாரத்தை உறுதிப்படுத்தவே முயற்சிக்கின்றது.
எனினும், நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்த அரசாங்கமும், பொலிஸாரும் மௌனம் காத்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.