Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / முக்கியஸ்தர் ஒருவருக்கு சவால் விடுத்த மகிந்த

முக்கியஸ்தர் ஒருவருக்கு சவால் விடுத்த மகிந்த

கொக்கேன் பாவிக்கும் அமைச்சர்கள் இருப்பார்களேயானால் உடனடியாக வெளிப்படுத்துமாறு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கேன் பாவிப்பதாக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த கருத்து தொடர்பில் கூறும் பொழுதே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையிலுள்ள அனைவருக்கும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைவரையும் குற்றஞ்சாட்ட முடியாது, அவற்றிலிருந்து விடுபட அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே போதைப் பொருள் பாவிப்பவர்களின் விபரங்களை உடனடியாக ரஞ்சன் ராமநாயக்க வெளியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv