Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மகிந்தவின் எச்சரிக்கை

மகிந்தவின் எச்சரிக்கை

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி பெரு வெற்­றி­பெற்­றா­லும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டனோ அல்­லது சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டனோ நாம் இணை­ய­மாட்­டோம். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் இணைந்து ஆட்­சி­ய­மைக்கமாட்­டோம் எனத் தெரி­வித்­துள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யு­டன் இணைந்து ஆட்சி அமைப்­போம் எனத் தெரி­வித்­தி­ருந்­தது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே, அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச பன்­னாட்டு ஊட­கத்­துக்கு வழங்­கிய செவ்­வி­யில் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள் ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணிக் கட்­சி­யின் தலை­வர் நானில்லை. அந்­தக் கட்­சி­யின் தலை­மைப் பத­வி­யை­யும் நான் ஏற்­க­வில்லை.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் பெரு­வெற்றி பெற்­றா­லும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டனோ அல்­லது சுதந்­தி­ரக் கட்­சி­யு­டனோ சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி இணை­யாது என்­றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv