Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அரசியல் தீர்மானத்தை எடுக்க போகும் மகிந்த!

அரசியல் தீர்மானத்தை எடுக்க போகும் மகிந்த!

கட்சியினர் மற்றும் நாட்டுக்காக பாரதூரமான அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க உத்தேசித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தங்காலை தொகுதி பிரதிநிதிகளுடனான கூட்டம் அங்குகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரக்கட்சியினர் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களிடம் சேவைகளை பெற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளமையானது, கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், கட்சியினர் மற்றும் நாட்டுக்காக முக்கிய அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளேன் எனவும் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கும் தீர்மானங்களால், கடும் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு கட்சியை அழிக்கும் வகையில், சர்வாதிகார தோரணையில் செயற்பட்டு வருவதாகவும் இதனால், தமக்கும், கட்சிக்கும், கட்சியின் உறுப்பினர்களுக்கும் அரசியல் எதிர்காலம் இருக்காது என இவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv