பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
பிரதமர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நாளைய தினம் மீண்டும் இலத்திரனியல் வாக்கெடுப்புமூலம் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் நாளைய சபை அமர்விலும் தமது அணி பங்கேற்காது என மஹிந்த கூட்டணி இன்றைய தினம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஸ் குணவர்தன,
”நாடாளுமன்றத்தில் நாளைய தினமும் போலியானமுறையில் தீர்மானம் நிறைவேற்ற சபாநாயகர் முயற்படுகின்றார் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது.எனவே, கட்சிசார்பாக செயற்படும் சபாநாயகர், நீதியாக செயற்படும்வரை சபை அமர்வில் பங்கேற்கமுடியாது” என தெரிவித்துள்ளார்.