நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதற்கு எதிராகப் பிரசாரப்போரை முன்னெடுப்பதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் பொருளாதாரத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
தேசிய அரசின் பட்ஜட் நவம்பர் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது மீது டிசம்பர் 9ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்நிலையிலேயே பட்ஜட்டிலுள்ள குறைபாடுகளை மக்கள் மீதான சுமைகளை மையப்படுத்தி மக்கள் மத்தியில் பிரசாரம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும், இதற்குரிய ஆரம்பகட்டப் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன என்றும் பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதற்கான அடுத்தகட்டப் பணி ஆரம்பமாகும் என்றும் பொது எதிரணி உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
அத்துடன், நாடாளுமன்றத்துக்குள் பந்துல குணவர்தன தலைமையிலான குழுவினர் விவாதங்களின்போது பட்ஜட்டிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி பேசவுள்ளதுடன், மக்கள் கூட்டங்களை நடத்தி தெளிவுபடுத்தும் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
https://www.youtube.com/watch?v=Zj7Co6nvMR0