காணாமல் போனோர் பணியகத்திற்கு ஆணையாளர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
ஹோகந்தர பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
காணாமல் போனார் பணியகத்திற்காக ஆணையாளர் நியமிக்கப்பட்டமையின் ஊடாக அரசாங்கம் காட்டிகொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் காட்டி கொடுப்பு வேலைத்திட்டங்கள் மீண்டும் இதன் ஊடாக தெளிவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தின் மூலம் தமிழர்களுக்கு எதிரான இனவாத கொள்கையை மஹிந்த கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.