Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்.!

அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்.!

நான் ஆட்சியில் இருக்கும் போது  பெறப்பட்ட கடன் தொகையை விட இவர்கள் சர்வதேச நாடுகளிடம் அதிக கடன் தொகையை பெற்றுள்ளனர். ஆனால் பெற்ற கடனுக்கேற்ற வேலைத்திட்டம் இல்லை. ஆனால் என்னால் இப்போதும் எனது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்களை பட்டியலிட்டு காட்ட முடியும். ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு முடியுமா? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

பதிவி ஆசையில் பதவி காலத்தை 6 ஆண்டுகளாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்தார். எனினும் அவரது ஆசை நிறைவேறவில்லை.  5 ஆண்டுகள் மாத்திரமே ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் என தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி குழப்பத்தில் உள்ளார். பதவியை தக்கவைத்துக் கொள்ள முடியாது போனதால் கோபத்தை என் மீத காட்டுகின்றார். அதனால் எந்த பிரயோசனமும் இல்லை எனக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அவர் மேலும்தெரிவித்தார்.

பலாங்கொடையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv