அடுத்த ஜனாதிபதியை மஹிந்த அறிவிப்பு
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்பார் என்ற நம்பிக்கை எல்பிட்டிய தேர்தல் ஊடாக ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எல்பிட்டிய தேர்தலில் மாபெறும் வெற்றியை பொதுஜன பெரமுன தற்போது பெற்றுள்ளது. அதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த வெற்றியின் ஊடாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் நாமே வெற்றி பெறுவோம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.