மகிந்த அரசாங்கத்தினை கவிழ்ப்பற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பை ரணில் அரசாங்கம் பயன்படுத்திவிட்டு தற்போது ஏமாற்றி விட்டதாக கூறப்படுகின்றது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரணிலுடன் இரகசிய ஒப்பந்தம் செய்ததாகவும் அது தற்போது கிழித்து எறியப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இலங்கை அரசிடம் இருந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு எப்பொழுதுமே ஏமாற்றம் அடந்து கொண்டே இருக்கின்றது. தலைமைகள் எப்பொழுதுமே தமது சுய இலாபங்களுக்காக கொள்கைகளை மாற்றிக்கொள்கின்றன. இப்படி ஏமாற்றும் அரசுக்கு சார்பாகவே சுமந்திரன் எம் பி வழக்காடியிருந்தார்.
இந்த அரசே நமக்கான தீர்வை வழங்கும் எனவும் அப்பப்ப கூறி வருகின்றார். தற்பொழுது சுதந்திர தினம் முடிவடைந்த பின்னர் மகிந்த அரசுடன் கூட்டு சேர்வதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த கூட்டமைப்பு தமிழர் நலனுக்காக உருவாக்கப்பட்டதா அல்லது தமிழர் நலன் என கூறிக்கொண்டு தமது சுய நல அரசியல் நகர்வுகளினை முன்னெடுக்கின்றனவா? தமிழர்களுக்கான முடிவினை தமிழ் மக்களே முடிவு செய்ய வேண்டும் இவர்களை நம்பி இருந்தால் மீண்டும் மீண்டும் ஏமாற்றமே..