Monday , October 20 2025
Home / முக்கிய செய்திகள் / சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

சிறிலங்கா இராணுவத்தின் 50 ஆவது தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இன்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார்.

சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை, பௌத்த மதகுருமாரின் ஆசி வழங்கும் நிகழ்வுடன் இந்தப் பதவியேற்பு இடம்பெற்றது.

சிறிலங்கா இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ரேனக உடவத்த உள்ளிட்ட உயர்நிலை இராணுவ அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இராணுவத் தலைமை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv