Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / அலாஸ்கா கடற்பகுதியில் 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை

அலாஸ்கா கடற்பகுதியில் 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை

அமெரிக்காவின் அலாஸ்கா கடற்பகுதியில் 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

தெற்கு அலாஸ்கா கடற்பகுதியில் 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கொடியாகில் இருந்து தென்கிழக்காக 300 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. கலிபோர்னியா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அலாஸ்கா ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கையும் அமெரிக்க தேசிய வானிலை சேவை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடற்கரை பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சேதம் தொடர்பான தகவல் வெளியாகவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv