தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளால் கைவிடப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் மக்களிடமும், அரசியல் வாதிகளிடமும் இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான இன்பராஜா கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தhர்.
இன்பராஜா வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்நிலையில் கொழும்பில் உள்ள நிதியமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவிடம் இது குறித்து ஊடகவியலாளர்கள் வினா எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர்:
‘இந்த நாட்டில் எந்தவொரு சட்டவிரோத ஆயுதங்களுக்கும் இடங்கொடுக்க மாட்டோம். அப்படியொரு இடம் இருந்தால் எமக்கு தகவல் தாருங்கள். பொலிஸாரும் நடவடிக்கை எடுப்பார்கள். சட்டவிரோத ஆயுதங்களுக்கு நாங்கள் அனுமதியளிக்க மாட்டோம். ஆனாலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்ட தகவல் தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்’ என்று தெரிவித்தார்.