லண்டன் தாக்குதல் – சமீபத்திய செய்திகள்
லண்டன் பிரதமர் தெரசா மே லண்டன் தாக்குதலில் கொல்லப்பட்டவருக்கு அஞ்சலி செலுத்தினர் அப்போது அவர் “‘ஒவ்வொரு அங்குலத்திலும் அவர் ஒரு காதநாயகனே” என்று கீத் பால்மரை புகழ்ந்தார்.
அப்போது அவர் தாக்குதலாளி பிரிட்டனை பிறப்பிடமாகக்கொண்டவர் என்றும் கொலையாளியை லண்டன் போலீசாருக்கும்,புலனாய்வு அமைப்பினருக்கும் தெரியும் என்று தெரியப்படுத்தினர்.
இந்த தாக்குதலில் 4o பேர் காயம் அடைந்ததாகவும் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரியவருகிறது.
இச் சம்பவத்தில் கொல்லப்பட்டதாக முதலில் அடையாளம் காணப்பட்ட பெண்மனியின் பெயர் ஐஷா ஃபிராடே, 43 வயதாகும் அவர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்.லண்டன் கல்லூரி ஒன்றில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் போலீசார் நடத்திய சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



