இலங்கையில் உள்ள 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 278 பிரதேசசபைகள் உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மொத்தம் 8,536 பதவிகளுக்காக 57 ஆயிரத்து 219 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு கோடியே 57 லட்சத்து 60 ஆயிரத்து 867பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 13 ஆயிரத்து 420 மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. ஒரு லட்சத்துக்கு 73 ஆயிரத்து 383 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.