சீனாவுக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளது!
நாளை முதல் சீனாவின் சில நகரங்களுக்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பீஜிங், ஷங்காய் மற்றும் கென்டன் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில் பீஜிங் விமான நிலையத்திற்கு நாளாந்தம் முன்னெடுக்கப்படும் 4 சேவைகள் இரண்டாக மட்டுப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் ஷங்காய் சர்வதேச விமான நிலையத்திற்கான சேவை நான்கிலிருந்து இரண்டாக மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
மேலும் கென்டன் நகருக்கு தற்போது முன்னெடுக்கப்படும் 7 விமான சேவைகளை மூன்றாகக் குறைப்பதற்கும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.