குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை
நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழு சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமுலாக்கும் முகவர் நிறுவனங்களுக்கு அந்த அதிகாரம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தாக்குதல் குறித்து விசாரித்து நாட்டிற்கு அறிவிப்தே பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பணி எனவும், என்ன நடந்தது என்பதை அறிய மக்களுக்கு உரிமை உண்டு என்றும், குழு அதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் எம்.ஏ. சுமந்திரன் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.