Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / சட்டம், ஒழுங்கு அமைச்சு ஏன் பொன்சேகாவிற்கு மறுக்கப்பட்டது?

சட்டம், ஒழுங்கு அமைச்சு ஏன் பொன்சேகாவிற்கு மறுக்கப்பட்டது?

இராணுவத்தில் பீல்ட் மார்சல் அதிகாரியாக தொடர்ந்து செயற்பட்டுவரும் ஒருவரை பொலிஸாருக்கு பொறுப்பானவராக நியமிக்க முடியாது. அதனாலேயே சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டமை தொடர்பாக நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சரத் பொன்சேகா கடந்த ஆட்சிக்காலத்தில் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததாக சுட்டிக்காட்டிய அவர், பொன்சேகா இப்பதவிக்கு நியமிக்கப்படும் பட்சத்தில் அவர் பழிவாங்கல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடும் எனவும் குறிப்பிட்டார்.

இராணுவத்தில் உள்ள ஒருவரை பொலிஸாருக்கு பொறுப்பானவராக நியமித்தால் அது பல பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv