பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நேற்றிரவு உலகின் பல்வேறு நகரங்களில் புவிநேரம் அனுசரிக்கப்பட்டது.
துருவப்பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் கடல் மட்டத்தின் அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் உயிர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதை தொடர்ந்து, புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் புவி நேரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்றிரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை புவி நேரம் அனுசரிக்கப்பட்டது. இதில் பல்வேறு நகரங்கள் பங்கெடுத்தன. மின் விளக்குகள் அணைக்கப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும் விதமாக பெங்களூர், சென்னை, புவனேஸ்வர், டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புவிநேரம் அனுசரிக்கப்பட்டது.