Thursday , August 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ராணுவ படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிப்பு

ராணுவ படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிப்பு

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஏறத்தாள 45 ஏக்கர்காணி மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது,

குறித்த காணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவ ஒத்துழைப்பு மையத்தில் நடைபெறவுள்ளது.

இதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளில் 42.5 ஏக்கர்காணி எதிர்வரும் 18ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv