கிம் ஜாங் நம் கொலை தொடர்பாக ஹையான் க்வாங் சாங் உட்பட மேலும் 3 பேரிடம் விசாரணை
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அண்ணன் கிம் ஜாங் நம். கடந்த 13-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் உயிரிழந்தார்.
குடும்ப சண்டை காரணமாக, கிம் ஜாங் உன் உத்தரவின் பேரில் கிம் ஜாங் நம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வடகொரியாவைச் சேர்ந்த 5 பேரை மலேசிய போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மலேசிய போலீஸ் அதிகாரி காலித் அபு பக்கர் நேற்று கூறும்போது, “கிம் ஜாங் நம் கொலை தொடர்பாக, வடகொரிய தூதரக அதிகாரி ஹையான் க்வாங் சாங் உட்பட மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு அந்நாட்டு தூதரிடம் அனுமதி கோரி உள்ளோம்” என்றார்.