அண்மையில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்ட்ட கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என்ற பெயர் பலகை ஒன்று காணப்பட்டது.
குறித்த பெயர் பலகையை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மாற்றியுள்ளதாக தெரியவருகிறது!
இதனால் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளது.
இது குறித்து கரைச்சி பிரதேச சபை செயலாளர் கம்சநாதன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது
இந்த பெயர் பலகை கரைச்சி பிரதேச சபையினால் தான் நாட்டப்பட்டது எனவும் கரைச்சி பிரதேச சபை கீழ் அது தாவரவியல் பூங்கா என்று வருகின்றது எனவும் மற்றும் அண்மையில் நடைப்பெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இது தாவரவியல் பூங்கா என்று தீர்மானம் எடுக்கப்ப்பட்டதாகவும்
தாவரவியல் பூங்கா என்ற பெயரிலேயே இது தற்போது அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றமையால் அதனை தெழிவூட்டும் வகையில் கரைச்சி பிரதேச சபையினால் தான் இந்த பெயர் பலகை நாட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.