Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தலையை சுத்தி மூக்கை தொட்டு ஆதார் கட்டாயம் – கஸ்தூரி கிண்டல்

தலையை சுத்தி மூக்கை தொட்டு ஆதார் கட்டாயம் – கஸ்தூரி கிண்டல்

ஆதார் அட்டை குறித்து இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதார் கார்டு செல்லும். ஆனால், கட்டாயமில்லை என அவர்கள் தீர்ப்பு வழங்கினர்.

அதாவது, அதிகப்படியாக பண வர்த்தனை செய்பவரை கவனிப்பதற்காக பயன்படுத்தப்படும் பேன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஆனால், வங்கிக் கணக்கு, தொலைப்பேசி சிம் கார்டு, கேஸ் இணைப்பு, நீட் தேர்வு ஆகிய விவகாரங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை எனவும், ஆதாரை காரணம் காட்டி மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக்கூடாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

வங்கி கணக்கிற்கு ஆதார் தேவையில்லை. ஆனால், பேன் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். பேன் கார்டு இல்லாமல் எந்த வங்கியும் கணக்கு திறப்பதில்லை. எனவே, எப்படிப் பார்த்தாலும் ஆதார் அட்டை இல்லாமல் வங்கி கணக்கு திறக்க முடியாது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “வங்கி கணக்குக்கு ஆதார் தேவையில்லை. ஆனால் பான் கார்டு தேவை. பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம். அப்படின்னா, தலையை சுத்தி மூக்கை தொட்டு கடைசியிலே ஆதார் கட்டாயம்னு…” என பதிவிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv