புதியதலைமுறையின் அக்னிப்பரிட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ‘கலைஞரின் உடல்நிலையைப் பொறுத்தவரையில் எந்தவித உபத்திரமும் இல்லை. 94 வயது அவருக்கு. அவருக்கு சலியை எடுப்பதற்கு ஒரு குழாயை வைத்திருக்கிறார்கள். அதுதான் அவரை பேசவிடாமல் தடுக்கிறது. பேச முடியாமல் இருப்பதுதான் கருணாநிதிக்கு இப்போது இருக்கிற ஒரு குறை. அந்தக்குழாயை எப்போது எடுப்பார்கள் எனத் தெரியவில்லை. மருத்துவரிடம் கேட்டால் இன்னும் கொஞ்ச நாள் ஆகும் எனத் தெரிவித்துள்ளனர்.
மற்றபடி அவரை இரவு 7 அல்லது 8 மணிக்கு மேல் குளிப்பாட்டி உட்கார வைப்பார்கள். இப்போது கூட ஷேவ் பண்ணாமல் இருக்க மாட்டார். தினமும் ஷேவ் செய்கிறார். நான் கூட சொல்வேன் இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல உங்களுக்கு.. தினமும் ஷேவ் பண்ணாம இருக்க முடியாதா? எனக் கேட்பேன். சிர்ப்பார். நல்லா இருக்கும்போது தினமும் ரெண்டு தடவை ஷேவ் பண்ணுவார். அவர் தனது உடலை கவர்ச்சிகரமாக வைத்துக் கொள்வதில் மிக நாட்டமுள்ளவர். புறப்படுவதற்கு முன்னாள் கண்ணாடியை 10 முறை பார்ப்பார். லிப்டில் இறங்கும்போது காலரை தூக்கி விட்டு கண்ணாடியை பார்ப்பார்.
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்று இறங்கும்போது காரில் இருக்கும் கண்ணாடியை ஒருமுறை பார்த்துக் கொள்வார்.அந்த அளவுக்கு இருந்தவரை இப்போது பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. என்னய்யா வா.. என அழைத்துப்பேசுவார். 52 ஆண்டுகாலம் தொடர்ந்து அவருடன் இருந்திருக்கிறேன். அவரை இப்போது பார்க்கிற போதெல்லாம் என் நெஞ்சு சுக்கு நூறாக வெடித்துப் போவதைப்போல இருக்கிறது’என அழுது கண்கலங்கினார்.