Sunday , August 24 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி

கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் நல்லமுறையில் தேறி வருவதாகவும், அவர் இன்னும் சில நாட்களில் பேசிவிடுவார் என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்

இந்த நிலையில் கருணாநிதி தனது பேரனின் மகனுடன் அதாவது மு.க.தமிழரசனின் பேரனும், நடிகர் அருள்நிதியின் 2 வயது மகனுமான மகிழனுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

கருணாநிதி தனது வீல்சேரில் உட்கார்ந்து கொண்டு பந்து வீச அதனை அவரது கொள்ளுப்பேரன் பேட்டினால் அடிக்கும் காட்சி இந்த வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவில் இருந்து கருணாநிதியின் உடல்நலை நன்கு தேறி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv