கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக விசாரணை நடத்த கனிமொழி கோரிக்கை
சென்னை அருகே கடலில் கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ராஜ்யசபாவில் தி.மு.க ., எம்.பி., கனிமொழி எழுப்பினார். இது குறித்து அவர் பேசுகையில்; எண்ணூர் அருகே சரக்கு கப்பல்கள் மோதியது. இதில் கசிந்த கச்சா எண்ணெய் முதலில் ஒரு டன் என்று தெரிவிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
உயிரினங்கள் பாதிப்பு :
ஆனால் தற்போது 40 டன் எண்ணெய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த எண்ணெய் கலப்பால் பெரும் கடல் வாழ் உயிரினங்கள், சுகாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.