சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும் வன்முறைக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கனடா, இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.
இனங்களுக்கிடையிலான அமைதியின்மை காரணமாக இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலை குறித்து கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃரீலண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முஸ்லிம் மக்களை இலக்குவைத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் இனங்களுக்கிடையிலான வன்முறை குறித்து கனடா ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுகளின் மூலம் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன்முறை மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் தவறான பிரசாரங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.