நடிகராக மட்டுமல்லாது சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன்.
இவர் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். இதற்கு அச்சாரமாக சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இன்று சென்னையில் மின்சாரம் தாக்கி இறந்த குழந்தைகளுக்காக இரங்கல் தெரிவித்தார்.
தற்போது டிவிட்டரில் மீண்டும் ஒரு தகவலை முன்னறிவிப்பாக அரசுக்கும், மக்களுக்கும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பல பகுதிகள் மூழ்கவிருக்கின்றது இதற்கு விரைந்து நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. pic.twitter.com/tkBXuRrIVN
— Kamal Haasan (@ikamalhaasan) 1 novembre 2017