Thursday , August 21 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / கமலின் கட்சிக்கொடி காப்பியடிக்கப்பட்டதா?… எங்கிருந்து தெரியுமா?..

கமலின் கட்சிக்கொடி காப்பியடிக்கப்பட்டதா?… எங்கிருந்து தெரியுமா?..

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியின் சின்னத்தின் வடிவம் காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன், கொடியில் உள்ள ஆறு கைகள், ஆறு தென்மாநிலங்களைக் குறிக்கும் என விளக்கமளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சின்னம் அறிமுகம் செய்த போது அதில் தாமரை, பாம்பு இடம் பெற்றிருந்தது. இதற்கு பலரும் கருத்து கூறினர். எங்கிருந்து காப்பியடித்தது என்று ஆதாரப்பூர்வமாக பதிவிட்டனர்.

இதனையடுத்து தாமரை, பாம்பு போன்றவைகளை நீக்கிவிட்டு இப்போது பாபா சின்னம் மட்டுமே உள்ளது. இப்போது கமலின் கட்சி, கொடி சின்னத்தையும் காப்பி என்று பதிவிட்டு வருகின்றனர்.

மும்பை தமிழர் பாசறையின் கொடியில் இருந்து மநீம கட்சிக்கொடி சுட்டது என்றும் கட்சி பெயரை எந்த படத்தில் இருந்து சுட்டார் என்று தெரியலையே என்றும் கேட்டுள்ளார் ஒருவர்.

National Federation of Postal Employees சங்கத்தோட லோகோன்னு நாளைக்கு யாராவது பிராதுன்னு வந்தீங்க…. அவ்வளவுதான் சொல்லிட்டேன். பாருங்க சார். காப்பியடிச்சி ஒரு கட்சி ஆரம்பிக்க விடுறாங்களா என்று கேட்கிறார் ஒருவர்.

அதிமுக,திமுக கட்சி கலரு,தேசிய கொடி கலரு,நடுவால சேகுவாரோ நட்சத்திர குறியீடு. திராவிடம் + ஹிந்துத்துவா + கம்யூனிஸ்ட். தட் பொங்கலுக்கு வடகறி காம்பினேஷன் தான் கமல் கட்சியோட கொடி குறியீடு என்று கூறியுள்ளார் ஒரு வலைஞர்.

கமல் கட்சி கொடி அவரே உருவாக்கினதா இல்ல யாருடையாவது ஆட்டையப்போட்டாரானு இன்னு இரண்டு மூன்று நாட்களில் தெரிய வரும்ன்னு சொல்றிங்களே.எப்படி சொல்றீங்க…? .எவனாவது இன்னும் இரண்டு நாட்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வான் பாரு என்று கேட்டுள்ளார் ஒருவர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv