தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், நாடளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை.
ஆனால் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டும் வேலையில் மக்கள் நீதி மய்யம் ஈடுபடும் என்று பதிலளித்தார்.
இந்தியா முழுவதும் காவிமயமாக மாற்ற நினைக்கிற பா.ஜ.வை ஒழிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது குறித்து கருத்து சொல்ல கமல்ஹாசன் மறுத்துவிட்டார்.