சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு – தமிழக பொறுப்பு ஆளுநர் முன்பு உள்ள வாய்ப்புகள் குறித்த அலசல்
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அடுத்த தமிழக பொறுப்பு ஆளுநர் முன்பு உள்ள வாய்ப்புகள் குறித்த அலசல்கள் ஆரம்பித்துள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி இன்று உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பளித்துள்ளது. இது சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்ப்பு என்பதால் தமிழகத்தில் உள்ள அனைவரின் கவனமும் உச்சநீதிமன்றத்தை நோக்கி திரும்பியுள்ளது. சசிகலாவிற்கு இது மிகமுக்கியமான பின்னடைவாகும். •அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டதன் காரணமாக தமிழக அரசியல் களத்தில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது சசிகலாவா? அல்லது முதல்வர் பன்னீர் செல்வமா? என்ற கேள்வி பரவலாக எழுந்தது. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு இந்த குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுக்காமல் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலம் தாழ்த்தி வருவதாக சசிகலா தரப்பில் குற்றம்சாட்டியது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்காகவே அவர் காலம் தாழ்த்தி வந்தார் என்று கூறப்பட்ட நிலையில் ஆளுநர் எதிர்பார்த்த தீர்ப்பு வெளியானது. •சசிகலாவா? ஓ.பன்னீர் செல்வமா? என்று முதலில் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் தற்போது தீர்ப்பு தெளிவாக வந்து விட்டதால் சசிகலாவை இந்த வாய்ப்பிலிருந்து ஆளுநர் எளிதாக தூக்கி விடலாம். • அடுத்து , முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடலாம்.