யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய திறந்த நீதிமன்றங்களுக்கான கட்டிடத்தின் அடிக்கல்லானது, இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.
தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 242 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் 3 மாடிக் கட்டடத் தொகுதி நிலக்கீழ் அடித்தளத்துடன் அமைக்கப்படவுள்ளது.