யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதியின் பூதவுடலை யாழ்ப்பாணம் முற்றவெளியில் தகனம் செய்யத் தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பொது இடத்தில் பூதவுடலைத் தகனம் செய்வது பொதுத் தொல்லை என மனு தாரரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவரின் விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் பொலிஸார் தேரரின் பூதவுடலை முற்றவெளியில் தகனம் செய்ய அனுமதி கோரினர்.
இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்த நீதிவான், தேர்ரின் பூதவடலை தகனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றது என்று தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்