தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் இன்னும் சர்ச்சை நீடிக்கிறது.
மூச்சுத்திணறல் காரணமாக ஜெயலலிதா உயிரிழந்ததாக அப்பலோ மருத்துவமனை வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழு அமைந்து ஆதாரதங்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்நிலையில் உடல்நலம் குன்றியிருந்த போது, ஜெயலலிதா பேசியதாக ஒலி பதிவு ஒன்றை டொக்டர் வெளியிட்டுள்ளார்.
2016ம் ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி ஜெயலலிதா தனது உணவு பழக்கம் தொடர்பில் பேசியுள்ளதாக டொக்டர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மூச்சு திணறல், இருமலுடன் ஜெயலலிதா பேசிய ஒடியோ தமிழக தொலைக்காட்சிகள் மூலம் வெளியாகி உள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் 13 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் எங்கும் கொந்தளிப்பு நிலை ஏற்றபட்டுள்ளது. இந்நிலையில் இன்றையதினம் இந்தக் காணொளி வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/A6qCCnkmxUQ