ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய அமெரிக்க ராணுவ வீரருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய அமெரிக்க ராணுவ வீரருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
அமெரிக்காவில் விர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்தவர் முகமது ஜாலோ (27). இவர் அமெரிக்க ராணுவத்தில் பாதுகாப்பு படை வீரராக இருந்தார். மதபோதகர் அன்வர் அல்-அல்லாகியின் பிரசாரத்தை கேட்டு ராணுவத்தில் இருந்து விலகினார்.
பின்னர் இவர் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் மறைமுக தொடர்பு வைத்திருந்தார். கடந்த ஆண்டு இவர் லிபியா சென்றார். அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளை சந்தித்தார். பின்னர் அங்கு முகாமிட்டிருக்கும் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த பயிற்சியும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
முன்னதாக நைஜர் நாட்டுக்கும் சென்று அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளை சந்தித்தார். மேலும் அந்த அமைப்புக்கு ரூ.40 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
அதை தொடர்ந்து அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.




