யாழ்ப்பாணத்தில் இன்று காலை சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் வறட்சியடைந்த பிரதேசங்கள் குளிர்ச்சியடைந்தன.
விவசாயிகள் நெல் விதைப்புக்காக மழையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளதால், அடுத்த கட்டமாக வயல்களை உழுது சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெள்ளம் தேங்கும் அளவுக்கு மழை வீழ்ச்சி பதிவாகவில்லை எனினும், விவசாயிகளுக்கு நன்மை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.