மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் தமது கட்சியின் உறுப்பினர்தான் என சிறிலங்கா சுதந்திரக்கட்சி சற்றுமுன்னர் அதிரடியாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான உறுதிப்படுத்தற் கடிதத்தை சற்றுமுன்னர் சபா நாயகரிடம் சுதந்திரக்கட்சி கையளித்துள்ளது.
சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்க்கட்சித் தலைவர் உறுதியாவதாக கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சபா நாயகர் தன்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் இன்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.