நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்கக் கூடிய தகுதி பெரும்பான்மை அடிப்படையில் எம்மிடமே காணப்படுகின்றது. அதனை எம்மிடம் ஒப்படைத்து விலகி விடுவதேசிறந்ததாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது நாட்டில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளனர் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தகுதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே காணப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 16 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளனர். அதிலும் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 98 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்தாலும் அந்த எண்ணிக்கையை எட்ட முடியாது.
நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளவர் என்ற அடிப்படையில் தம்மிடம் எதிர்க்கட்சி பதவி வகிப்பதற்கான பெரும்பான்மை இல்லை எனும் போது மதிப்பாக அதை எம்மிடம் ஒப்படைத்து விலகி விடுவதே சிறந்ததாகும்.
பெரும்பான்மையற்ற அரசின் அமைச்சரவையே நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வாறு வேலை திட்டங்களை முன்னெடுக்கின்றார்கள் என்பதை அவதானித்து எதிர்க்கட்சியாக நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம் – என்றார்.