Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / பெரியார் சிலைக்கு மட்டும் உயிருள்ளதா? எச்.ராஜா பதிலடி

பெரியார் சிலைக்கு மட்டும் உயிருள்ளதா? எச்.ராஜா பதிலடி

உயிரற்ற பட்டேலின் சிலைக்கு ரூ.3000 கோடி, உயிருள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி ரூ.350 கோடியா? என திமுக எம்பி கனிமொழி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

திமுகவின் மற்ற தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தாலும் கனிமொழி எம்பியை பொருத்தவரையில் பாஜகவுடன் இணக்கமாக இருந்ததாகவே கூறப்பட்டது. ஆனால் அவரும் தற்போது மத்திய அரசை விமர்சனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கனிமொழியின் இந்த டுவீட்டுக்கு பதிலடி தரும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியபோது, ‘குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை, ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா? என கனிமொழிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு நெட்டிசன்களிடம் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி பதிவாகி கொண்டிருக்கின்றது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv