ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீச்சு 12 பேர் காயம்
ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய ரசாயன குண்டு வீச்சில் 12 பேர் காயம் அடைந்தனர். ரசாயன குண்டுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் மறைமுகமாக தயாரித்து வந்தனர். அதை முதன் முறையாக மொசூலில் பயன் படுத்தியுள்ளனர்.
ஈராக்கின் மிகப் பெரிய 2-வது நகரமான மொசூல் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்தது. அதை மீட்க ஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு அமெரிக்க கூட்டு படைகளும் உதவின.
மொசூல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் மீட்கப்பட்டு ராணுவ வசம் ஆகியுள்ளது. தங்களது தோல்வியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைவர் அபுபகர் அல்-பக்தாதி ஏற்றுக் கொண்டுள்ளார்.
இத்தாக்குதல் நடந்த போது மொசூல் பகுதியில் ரசாயன குண்டுகள் சரமாரியாக வீசப்பட்டது. இதில் 12 பேர் காயம் அடைந்தனர்.
மொசூல் அருகேயுள்ள இர்பில் நகரை சேர்ந்தவர்கள். அவர்களில் 11 வயது சிறுவன் கடுமையான மூச்சு திணறல், தோல் நோய் பாதிப்பில் அவதிப்பட்டு இருக்கிறான். காயம் அடைந்தவர்களை பரிசோதித்த போது ரசாயன குண்டு வீச்சு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்க டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் யார் ஈடுபட்டது என அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என ஈராக் மற்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரசாயன குண்டுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் மறைமுகமாக தயாரித்து வந்தனர். அதை முதன் முறையாக மொசூலில் பயன் படுத்தியுள்ளனர்.