Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / இலங்கையை நோக்கி மற்றுமொரு புயலா ?

இலங்கையை நோக்கி மற்றுமொரு புயலா ?

இலங்கைக்கு 1700 கிலோமீற்றர் தொலைவில் தெற்கு அந்தமான் தீவுகளை அண்டிய பகுதியில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குறைந்த தாழமுக்க வலையமானது எதிர்வரும் சில தினங்களில் வலுவடைந்து வங்காள விரிகுடா கடற்பரப்பினூடாக இந்திய நிலப்பரப்பிற்குள் இதன் தாக்கம் ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறைந்த காற்றழுத்த வலயமானது எதிர்வரும் 5 ஆம் அல்லது 6 ஆம் திகதிகளில் இலங்கையின் ஊடாக மேற்கு திசையில் செல்ல உள்ளதால் அது வலுவடைந்து புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் காரணமாக இலங்கை மீதான தாக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காற்றழுத்தம் புயலாக மாறுமிடத்து இலங்கை மற்றும் தமிழகத்தின் கரையோரப்பகுதிகளுக்கு கடுமையான சேதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையின் கொழும்புக்கு மேற்காக நிலைகொண்டிருந்த ஒக்கி எனப்படும் சூறாவளி தற்போது அரேபிய கடல்நோக்கி நகர்ந்து 850 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள நிலையில் மற்றுமொரு புயல்சின்னம் ஒன்று இலஙக்கைக்கு 1700 கிலோ மீற்றர் தொலைவில் தெற்கு அந்தமானை அண்டிய பகுதிகளில் உருவாகியுள்ளமை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv