தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டியமை தொடர்பில் 13 பேர் சுவிற்சர்லாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 13 பேரும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் உறுப்பினர் கள். சுவிற்சர்லாந்து, ஜேர்மனியில் வாழும் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியுள்ளனர்.
சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். இதற்காக வங்கியில் போலியான சம்பளச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
அமெரிக்க மதிப்பில் 15.3 மில்லியன் டொலர் பணத்தைச் இதனூ டாகப் பெற்றுள்ளனர். இது தற்போது தெரியவந்ததால், அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வங்கியில் பெறப்பட்ட பணத்தைச் சிங்கப்பூர் மற்றும் டுபாய் வழியாகத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
13 பேர் மீதும் மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.