பேட்ட, விஸ்வாசம் நாளை மிகப்பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் ரஜினி, அஜித் பேனர், போஸ்டர்கள் தான்.
அந்த அளவிற்கு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் நாளை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் யார் முந்துவார்கள் என்று பெரிய போட்டியே நடந்து வருகின்றது.
இதில் அதிக திரையரங்குகள் பிடித்த விஸ்வாசமே எப்படியும் அதிக வசூல் வரும், ஆனால், சென்னையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட முதலிடத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தற்போது கிடைத்த தகவல் படி விஸ்வாசம் எப்படியும் ரூ 18 கோடி, பேட்ட ரூ 14 முதல் 16 கோடி வரை முதல் நாள் வசூல் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
படத்தின் ரிசல்ட்டை பொறுத்தே அடுத்தடுத்து நாட்களின் வசூல் இருக்கும் என தெரிகிறது.