Wednesday , February 5 2025
Home / விளையாட்டு செய்திகள் / எனக்கும் டி வில்லியர்ஸ்க்கும் இடையிலான தொடர் இல்லை

எனக்கும் டி வில்லியர்ஸ்க்கும் இடையிலான தொடர் இல்லை

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் கேப் டவுன் சென்றடைந்தது. நேற்று பயிற்சியை தொடங்கியது இந்தியா.

தென்ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி கேப்டன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான தொடரை இரு வீரர்களுக்கு இடையிலான போட்டி என்பதை ஏற்க இயலாது. டி வில்லியர்ஸ் எனக்கு சிறந்த நண்பர். கிரிக்கெட்டை பொறுத்த வரையிலும், தனிப்பட்ட முறையிலும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், போட்டி என்று வந்தால் நட்பு என்பதெல்லாம் கிடையாது. அதை தாண்டி அணியின் வெற்றிக்காக மோதிக் கொள்வோம்.

நாங்கள் டி வில்லியர்ஸ்சை அவுட்டாக்க விரும்புவோம். அதைபோல் அவர்கள் என்னை, புஜாரா மற்றும் ரகானேவை அவுட்டாக்க விரும்புவார்கள். எந்தவொரு மேட்ஸ்மேனுக்கும் எதிராக, எனது மனநிலையில் இதைத்தவிர மற்ற ஏதும் இருப்பதாக தோன்றவில்லை.

ஒவ்வொரு வீரர்களும் அணியின் வெற்றிக்காக தனது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புவார்கள். ஒரு அணியாக இணைந்து செயல்படவில்லை என்றால், தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு கிடையாது’’ என்றார். #INDvSA #ViratKohli #ABDevilliers

Check Also

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நேற்று வண்ண வண்ண நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தொடங்கியது. முதல் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு …