ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்திருந்த நிலையில்,
அந்த பிரேரணையில் கையொப்பமிட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டுவதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.
குற்றப் பிரேரணைக்கு இதுவரையில் 10 பேர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தின் இறுதியில் அரசியல் நெருக்கடி நிலைமைய தோற்றுவித்து நாட்டில் குழப்ப நிலையை உருவாக்கியமை, ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமை ஆகிய காரணங்களை மையப்படுத்தி ஜனாதிபதிக்கு எதிராக இவ்வாறு குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.